Thursday, 8 May 2014

அமைதி

ஊரெங்கும் பசுமை பூத்திருக்க
அந்தியில் ஆம்பல் மணம்வீச
கார்மேகம் தெளித்த மழைச்சாரலில்
மண்வாசம் மணம் வீச
சாரலோடு வந்த தென்றலும்
தென்றலோடு வந்த மலர்வாசதையும்
மழை பொழிய காத்திருக்கும் வானத்தையும்
மேல்நோக்கி பார்த்த ஈழமைந்தனின்
கண்இமை கீழ் அசைவதற்குள்
வானத்தை பீறிட்டது இடிமுழக்கம்
மழை நீரை எதிர்பார்த்த அவன் கண்களுக்கு
பொழிந்தது நீர்மழையல்ல தீமழை
கார்மேகம் தெளித்ததோ தோட்டாக்களை
தென்றல் அனலாய் வீசியது
மண்வாசமோ ரத்தவாடையாய் மாறியது
தமிழன் நெற்றி வியர்வை காய்வதற்குள்
மண்ணில் குருதி உறைந்துபோனது
வானமும் அவனுக்கு பொய்த்தது
இறுதியாக அவன் உறங்கியது
அன்று முன் தினமே
மறுமுறை இமைகள் சேர்ந்தால்
மீண்டும் பிரியாது
"அமைதி வேண்டி"
அமைதியாய் வாழ்ந்த கிராமம்
உண்மையில் அமைதியாய் காட்சியளித்து
"இங்கே அமைதி அமைதியானது"